இலங்கைக்கான விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்த ரஷ்யாவின் "ரெட் விங்ஸ்" விமான நிறுவனம்
#SriLanka
#Russia
#Flight
#Airport
#today
#Tourist
Prasu
2 years ago

ரஷ்யாவின் "ரெட் விங்ஸ்" விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை இன்று (29) ஆரம்பித்துள்ளது.
அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
"ரெட் விங்ஸ்" விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



